நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.ஏ.எம்.றாபி (SLTS– Special Class) நாளை திங்கட்கிழமை முதல் (13-11-2023) தனது 30 வருடகால காணி உத்தியோகத்தர் சேவையில் இருந்து தலைமைத்துவ காணி உத்தியோகத்தராக அம்பாரை மாவட்ட செயலகத்திற்கு பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார்.
இவர் 1993.08.02 ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் முதல் நியமனம் பெற்று அதன் பின்னர் காத்தான்குடி , நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, திருகோணமலை, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றி பின்னர் 2023.11.13 ஆந் திகதி முதல் தலைமை காணி உத்தியோகத்தராக பதவி உயர்வு பெற்று அம்பாரை மாவட்ட செயலகத்தில் கடமையேற்கவுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours