(சுமன்)
மட்டக்களப்பு பிராந்திய மாகாண பிரதி
நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக
கடமையாற்றிய எந்திரி. ஏ.இராஜகோபாலசிங்கம் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக
பதவி உயர்வு பெற்றுச் சென்றதையடுத்து கிழக்கு மாகாண நீர்ப்பாசனப்
பணிப்பாளர் பணிமனையில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராக
கடமையாற்றிய
இலங்கை பொறியியல் சேவை தரம் ஐ இல் உள்ள, கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த
பொறியியலாளர் கந்தசாமி பிரதீபன் அவர்கள் மட்டக்களப்பு பிராந்திய மாகாண
பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனையின் புதிய பிரதி நீர்ப்பாசனப்
பணிப்பாளராக கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் நியமனம் பெற்று இன்றைய தினம்
தனது கடமைகளை உத்தியோகபூர்மாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பேராதனைப்
பல்கலைக்கழகத்தின் பொறியியல் விஞ்ஞானமானி பட்டத்தை சிவில் துறையில் பெற்ற
பட்டதாரியான இவர், இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் பட்டயப் பொறியியலாரும்
ஆவார். இவர் தனது ஆரம்பக்கல்வியை கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் மகா
வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மட்ஃமெதடிஸ்த மத்திய கல்லூரியிலும்
பயின்றவராவார்.
கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தில் 16
வருடகாலமாக கடமையாற்றி வருகின்ற சிரேஸ்ட பொறியியலாளரான இவர் மட்டக்களப்பு
பிராந்தியத்திற்குட்பட்ட செங்கலடி மற்றும் பட்டிருப்பு நீர்ப்பாசன
பொறியியலாளர் பிரிவுகளுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளராகவும்
கடமையாற்றி நீர்ப்பாசன அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை வழங்கியவர்.
இவர்
செங்கலடி பிரிவுக்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளராக கடமையாற்றிய
காலப்பகுதியில் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்த மியான்கல் குளம் இவரது
காலப்பகுதியிலேயே (2011-2013) பாரிய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு முதன்
முறையாக 2013 இல் நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டது
Post A Comment:
0 comments so far,add yours