- யூ.கே. காலித்தீன் -
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையும் சாய்ந்தமருது பிரதேச செயலகமும் இணைந்து முன்பள்ளி பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளுக்கான இஸ்லாமிய மார்க்க வழிகாட்டல் கருத்தரங்கு எனும் தலைப்பில் இன்று (07) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வானது சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம்..எம். சலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
விஷேட அதிதியாக முன்னால் அம்பாரை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையினுடைய தலைவரும் அத்-தைபா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷேய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி) அவர்களும், விஷேட சொற்பொழிவாளராக மருதமுனை தாருல் ஹுதா பெண்கள் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் கலாநிதி எம்.ஐ.எம். முபாரக் (மதனி)
உரைநிகழ்த்தும் போது
இஸ்லாம் சிறுவர்கள் விடயத்தில் மிகக் கவனமான, வழிமுறைகளை உலகுக்கு காட்டியுள்ளது. கருவிலுள்ள சிசு முதல் அது ஒரு குழந்தையாகப் பெற்றெடுக்கப்பட்டு, அது ஒரு சிறுவனாக, இளைஞனாக, நடுத்தர வயதினராக, முதியவராக ஆகும் வரையிலான எல்லா படித்தரங்களிலும் சீரான சிறப்பான வழிகாட்டல்களை அமைத்துத் தந்துள்ளது.
எப்போது அல்குர்ஆனும் அல்ஹதிஸும் எமக்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளை, முன்மாதிரிகளைப் பின்பற்றாது சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்க முற்பட்டால் சமுதாயதாயத்திற்கு சீர் குலைவுதான் ஏற்படும்.
கருவிலுள்ள சிசு முதல். அது ஒரு குழந்தையாக பெற்றெடுக்கப்பட்டு, அது ஆளாகும் வரையிலான எல்லா படித்தரங்களிலும் சீரான சிறப்பான வழிகாட்டல்களை அமைத்துத்தந்துள்ளது.
எப்போது. அல்குர்ஆனும் அல்ஹதிஸும் எமக்கு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாது சிறுவர்களை பயிற்றுவிக்காது விட்டால் சமுதாயத்திற்கு சீர் குலைவுதான் ஏற்படும்.
இஸ்லாமிய நெறியில் சிறுவர்களை நமது ஆரம்ப கல்விக் கூடத்தில் வெருமென புத்த பூச்சாக மாத்திரமல்லாது, அவர்களை லௌகிக நலன் நாடிய ஆளுமைகளாகவும், ஆன்மிக ஆளுமை விருத்தியும் நோக்கமாக பார்க்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடல் வேண்டும்.
சிறுவர்களின் ஆன்மிக லௌகிக முன்னேற்றத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொடுத்த முக்கியத்துவம், அதற்காக அவர்கள் காட்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் விளக்கினார்.
சிறுவர்கள் பல விடயங்கள் குறித்தும் அவர்கள் சிந்திக்கின்றனர். அவர்கள் கள்ளம் கபடம் இல்லாததினால் தமது மனதில் எழுந்த எண்ணத்தை பளிச்சென வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றனர்.
இது அவர்களின் சிந்தனையின் வெளிப்பாடு இதைத் தடுத்து அவர்களின் சிந்திக்கும் திறனையும் கற்பனை வளத்தையும் முளையிலேயே முடக்கி விடக்கூடாது.
மேலும் ஆடை விடயத்தில் அவதானம் செலுத்த வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்பர். ஆடையை வைத்து மனிதன் மதிப்பிடப்படுகின்றான்.
எனவே மனிதன் அணியும் ஆடை அவனுக்கு கண்ணியத்தையும், ஆளுமையையும் அளிக்கின்றது. சில ஆடைகள் குப்பார்களின் அடையாளமாகவும் மற்றும் சில ஆடைகள் குற்றச் செயல்களைச் செய்பவர்களினதும், நாகரிகமற்றவர்களினதும் ஆடைகளாக உள்ளன.
எனவே சிறுவர்கள்களின் ஆடை விடயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கூறி சிறந்த அறிவுரையினை நிகழ்த்தினார்.
இதன் போது உலமா சபையின். உப தலைவர்களான அஷ்ஷேய்க் எஸ். எம்.நபார் (அஸ்ஹரி), அஷ்ஷேய்க் ஏ.ஏம். அன்சார் (தப்லீகி), அதன் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எச். எம். நப்ராஸ் (ரஹ்மானி), பொருளாளர் அஷ்ஷேய்க் எஸ். எம். ஜினான் (ஸஃதி), உறுப்பினர்களான அஷ்ஷேய்க் ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி), ஆகியோர்களும், பிரதேச செயலகத்தினுடைய உதவி பிரதேச செயலாளர் எம். ஜே. முவஃபிகா, நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மத் , சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் செயளாலர் எம்.ஐ. மன்சூர், மற்றும் முன்பள்ளி பாடசாலைகளில் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோரை கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours