மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல்முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில் நவீன கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய அதிபர் எம்.என்.மகத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
வன்னிஹோப் அவுஸ்ரோலியா நிறுவனத்தினதும், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினதும், அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் வன்னிஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முகமட் பாரீஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி.எம்.ஜே.எவ்.றிவ்கா, எம்.எச்.எம்.றமீஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.முபாஸ்டீன், மற்றும் வன்னிஹோப் நிறுவனத்தின் இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மணாவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது டிஜிட்டல் முறையில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வகையில் மிகவும் பெறுமதிவாய்ந்த திறன் வகுப்பறைக்குரிய ஸ்மாரட் வோட், மணிக்கணிணி, புறஜெற்றர் உள்ளிட்ட பொருட்கள் வித்தியாலய அதிபரிடம் வன்னிஹோப் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரி.முகமட் பாரீஸ் வழங்கி வைத்தார்.
தமது வேண்டுகோளை ஏற்று எமது பாடசாலைகே நேரில் வந்து திறன் வகுப்பறைக்குரிய பொருட்களைத் தந்துதவிய வன்னிஹோப் நிறுவனத்திற்கு தாம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவதாக இதன்போது பாடசாலைச் சமூகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours