( வி.ரி.சகாதேவராஜா)
அகில இலங்கைத் தமிழ் மொழித் தினத் தேசிய மட்டப் போட்டியில் சம்மாந்துறைக்கு இரண்டு வரலாற்றுச் சாதனைகள் கிடைத்துள்ளன.
இவ்வருடத்துக்கான
அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியில் கிழக்கு மாகாணத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்தாம் பிரிவு இலக்கிய விமர்சனப் போட்டியில்
போட்டியிட்ட சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலை
மாணவி அல் - ஹாபிழா ஏ. தபானி அபா முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச்
சாதனை படைத்துள்ளார்.
இவர் ஐ.எல்.அமீனுத்தீன்
ஏ. எல். றாஜிதா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வி ஆவார்.
போட்டிக்கான நெறிப்படுத்தலை ஆசிரியர் எம்.ஐ. அச்சி முகம்மட் மேற்கொண்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
றுஹைமி முதலாமிடம்!
அதேவேளை
முதலாம் பிரிவு வாசிப்புப் போட்டியில் போட்டியிட்ட சம்மாந்துறை முஸ்லிம்
மகளிர் வித்தியாலய மாணவன் என்.றுஹைமி முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச்
சாதனை படைத்துள்ளார்.
இவர்
ஏ.பி.
நெளபீல், எம்.வை. சாமிலா ஆகியோரின் இரண்டாவது புதல்வன் ஆவார்.
போட்டிக்கான நெறிப்படுத்தலை ஆசிரியை பௌமியா மேற்கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
தங்கப்பதக்கம்களையும் சான்றிதழ்களையும் கல்வி அமைச்சின் தமிழ் மொழிபிரிவு பணிப்பாளர் சு.முரளிதரன் வழங்கி வைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours