( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை ரொட்டரிக்கழகத்தின்   200 மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ்  கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட 58 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு கழகத்தலைவர் ரொட்டரியன் ஏஎல்ஏ. நாசர் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரி மண்டபத்தில் நேற்று முன்தினம் (2) வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் ரொட்டரியன் எஸ். புஷ்பராசா, ரொட்டரியன் மு. சிவபாதசுந்தரம்,ரொட்டரியன் வி. விஜயசாந்தன்,ரொட்டரியன் ந. றதீசன் தலைவர் 2024/2025 மற்றும் அங்கத்தவர் ரொட்டரியன் எம். அமிர்தசங்கர் ஆகியோரும் பங்குபற்றினர்.

 பாடசாலை அதிபர் எஸ். கலையரசன் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours