(ஏ.எஸ்.மெளலானா)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் நஸ்மியா சனூஸ் நேற்று செவ்வாய்க்கிழமை (07) கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியை சந்தித்து, கல்லூரியில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான பொறிமுறைகள் பற்றி ஆணையாளரினால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதன் பிரகாரம் பாடசாலைகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்காக மாநகர சபையினால் வகுக்கப்பட்டுள்ள விசேட திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தமது கல்லூரி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அதிபர் உறுதியளித்தார்.
அத்துடன் குப்பைகளை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பைகளையும் மாநகர ஆணையாளரிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
Post A Comment:
0 comments so far,add yours