(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையின் அங்கத்தவராக இலங்கை தேசிய ஐக்கியத்திற்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர், அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா அல்-காதிரி நியமிக்கப்பட்டார். 

ஐக்கிய நாடுகள் சமாதானத் தூதுவர் பேரவையினால் (UNPAF) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு (03) இடம்பெற்றது.

சர்வதேச சமாதான மாநாடு ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய செயலாளர் கலாநிதி ஹமிட் ஸைடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நியமனச் சான்றிதழை ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு ஆசிய பிராந்திய சமாதானத் தூதுவர், பேராசிரியர் டாக்டர். ஜி. ஜெகப் ஸைமன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், சமயத்தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சமாதான தூதுவர் பேரவையின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவுக்கான இணைப்பாளர் கலாநிதி தேசமான்ய கே.ஏ.எஸ்.எம்.கே. ரத்னாயக உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours