இ.சுதாகரன்
பொருளாதார
நெருக்கடி கால மாற்று உபாயக் கல்வி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள சித்திரம் மற்றும் நாடகமும் அரங்கியலும்
ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தி மற்றும்
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர,உயர்தரம் கற்கும் மாணவர்களின் பரீட்சைப்
பெறுபேற்றினை உயர்த்துவதற்கான மாற்றுபாயங்களை மேம்படுத்தல் தொடர்பான
விழிப்பூட்டல் செயலமர்வு கோயில் போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தின்
ஒன்று கூடல் மண்டபத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) நடைபெற்றது.
பட்டிருப்பு
வலயக்கல்விப் பணிப்பாளர் சேவைத்திலகம் திரு.சி.சிறிதரன் அவர்களின்
வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற செயலமர்வில் நாடகமும்
அரங்கியலும் பாடத்துக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஸ்
மற்றும் சித்திரக்கலைப் பாடத்துக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் திரு
புத்திசிகாமணி சிறிக்காந் பாடசாலை முதல்வர் திரு.பரமானந்தம் உட்பட
பாடத்துறைசார் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours