கமலி
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கமைய "போதைப் பொருள் அற்ற இளைஞர் தலைமுறை" எனும் கருப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று ஒந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் அதிபர் திருமதி ம.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
நாட்டில்
நாளுக்கு நாள் அதிரித்து வரும் போதைப் பொருள் பாவனை அல்லது போதைப் பொருள்
பரவல் தீவிர சமூகப் பிரச்சிளையாக மாறி வருகின்றது.
குறிப்பாக
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகம் இதற்கு நேரடியாக பலியாகி
உள்ளதுடன் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் வியாபாரிகளின் பிடியில்
சிக்கியும் வருகின்றனர் இந்த நிலை பொதுவாக அவர்களின் உயிருக்கு கடுமையான
அச்சுறுத்தலாக உருவாகியுள்ளதுடன் அது குடும்பத்துடன் தொடர்புபட்ட சமூக
பேரழிவுந்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இதன் பொருட்டு
குழந்தைகள், மக்களை எதிர்காலத்தில் சமூகப்பற்றுள்ள பிரஜையை
உருவாக்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக செயற்பட்டு
அச்சுறுத்தலை குறைத்து சமூக முன்னேற்றத்துக்காக பங்காற்றும் குடிமகனை
உருவாக்குவதனை நோக்கா கொண்டு உருவாக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு
வேலைத்திட்டத்திற்கு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
குறித்த கருத்தரங்கின்
வளவாளர்களாக இளைஞர் சேவைகள் மன்றத்தின் பயிச்சி பெற்ற அதிகாரிகள், பிரதேச
செயலக உளவளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குறித்த கருத்தரங்கினை
நடாத்தியிருந்தனர்.....
Post A Comment:
0 comments so far,add yours