நூருல் ஹுதா உமர் 
 
இஸ்ரவேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசளுக்கு முன்பாக ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் வெள்ளிக்கிழமை (3) பேரணி நடைபெற்றது.

குறித்த பாலஸ்தீன ஆதரவு பேரணி கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் உலமாக்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவரும், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிருவாக சபையின் தலைவருமான டாக்டர் அல்-ஹாஜ் S.M.A. அஸீஸ் தலைமையில் நடைபெற்றது. 

இப் பேரணியில் இஸ்ரவேலின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் உரை நிகழ்த்தப்பட்டதுடன், துஆ பிராத்தனையும் நடைபெற்றது. 

இப்பேரணியில் உணர்வுபூர்வமாக கலந்துகொண்ட பொதுமக்கள் சுலோகங்களை ஏந்தியவாறு இஸ்ரவேலின் மனிதாபினானமற்ற செயற்பாடுகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours