(பாறுக் ஷிஹான்)

இயற்கையை நேசித்து சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ   எண்ணத்தில்   அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ  வழிநடத்தலில்  முப்படைகள் மற்றும் சமூக செயற்பாட்டு அமைப்புக்களின் பங்களிப்புடன் அம்பாறை  நகரை பசுமை நகரமாக மாற்றும் நோக்கில் இரண்டாம் கட்ட பசுமை திட்ட நிகழ்வு   கடந்த மாதம் ஆரம்பமானது. அதன் தொடர்ச்சியாக இன்று  5500 செடிகள் நடும்  திட்டத்தில்   அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்திற்கு அருகாமையில்  காலை 9 மணிக்கு 3200 செடிகள்  நடப்பட்டன.

இதன் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டீ.வீரசிங்க, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம, ஓய்வு பெற்ற  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்னாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், முப்படை அதிகாரிகள் , திணைக்களங்களின் தலைவர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்  ,  முப்படைகளின் தலைவர்கள், பொலிஸ் உத்தியோகத்தகர்கள்,  அரச உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்து  கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

இதன் போது அம்பாறை மாவட்ட பகுதிகளை அழகுபடுத்தும் நோக்குடன் இத் திட்டம்  முன்னெக்கப்பட்டுள்ளதாகவும்  இன்று  சுமார் 3200க்கு  மேற்பட்ட மரக்கன்றுகள்   நடப்பட உள்ளதுடன்  அம்பாறை நகர பிரதேசத்தை பசுமைத் திட்டங்களின் கீழ் உள்வாங்குவதன் அவசியம் மற்றும் பசுமை தரும் மரங்களை நடுவதன் ஊடாக மக்களுக்கான நன்மைகள் தொடர்பில்    அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ    ஊடகங்களிற்கு தனது கருத்தில் தெரிவித்தார்.

 மேலும் இப்பசுமைத் திட்டங்களின் கீழ்  நகர சபை உள்ளிட்ட பல தரப்பினரை உள்வாங்கி   பாதைகளின் நடுவில்  மரங்களை நாட்டுதல் அவற்றை பேணுதல் ஆடு மாடுகள் தீண்டுவதில் இருந்து பாதுகாத்தல் தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours