(சுமன்)

சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் அவர்களினால் எழுதப்பட்ட 'கிழக்கில் சிவந்த சுவடுகள்' எனும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலான தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் கிழக்கிலங்கை பத்திரிகையாளர் சங்கம், மட்டு ஊடக அமையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சிரேஸ்ட ஊடகவியலாளர் செ.பேரின்பராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் அட்சியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம், முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புகளின் பிரந்திநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நூலின் அறிமுக உரையை முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் அவர்களும் நூல் நயவுரையினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான கி. துரைராசசிங்கம் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அ.நிக்சன் ஆகியோரால் சிறப்புரைகள் இடம்பெற்றன.


இதன்போது வருகை தந்த அதிதிகளுக்கு நூலாசிரியரால் நூல் கையளிக்கப்பட்டதுடன், பொது அமைப்பினர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கும் நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours