(எம்.ஏ.றமீஸ்)
பொத்துவில் பிரதேச செயலகத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பொத்துவில் ஹிஜ்ரா நகரில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார். இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான 15000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குடும்பங்கள், மாற்று வலுவுள்ளோரை கொண்ட குடும்பங்கள், நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் முதியோர் போன்றோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்வுதவி பெறுவதற்கென பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் 5304 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுன்னகர். அவர்களுள் முதற்கட்டமாக 178 பயனாளிகளுக்கு இவ்வுணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ், உதவி பிரதேச செயலாளர் எம்.இராமக்குட்டி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.எம்.சப்ரி, உலக உணவு திட்டத்தின் இணைப்பாளர் எஸ்.பாக்கியநாதன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours