கமலி
இலங்கை அதிபர் சேவை போட்டி பரீட்சையில் சித்தி பெற்று புதிதாக அதிபர் நியமனம் பெற்ற அதிபர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சி.சிறிதரன் தலைமையில் .
பட்டிருப்பு கல்வி வலய கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
பட்டிருப்பு கல்வி வலய அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்
நிகழ்வில் வலயம் சார்ந்த பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவி கல்வி
பணிப்பாளர்கள், அதிபர், சங்க பிரதிநிதிகள், ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
இந்
நிகழ்வில் முதலாவது அங்கமாக அனுபவம்மிக்க அதிபர்களினால், அதிபர் சேவை
தொடர்பில் தற்காலத்தில் எழுந்துள்ள சவால்கள் தொடர்பாகவும் அதனை வெற்றி
கொண்டு சிறப்பான முறையில் பாடசாலையில் கடமைகளை முன்னெடுப்பது தொடர்பாக
விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 20புதிய அதிபர்களின் அறிமுக நிகழ்வு நடை பெற்றது.
இதன்
பின்னர் வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களினால் புதிய அதிபர்களை
கௌரவிக்கும் முகமாக வாழ்த்து மடல் வழங்கப்பட்டதுடன் நடைபெறவிருக்கும்
அதிபர்களுக்கான ஒருமாதகால பயிற்சி நெறிக்கு முகங்கொடுத்து அவற்றினை
வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தேவையான ஆலோசனையும் வழிகாட்டலும் வலயக்கல்வி
பணிப்பாளர் அவர்களினால் இதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours