கிலசன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் நிலப்பரப்பில் எல்லைக் கிராமமான மண்டூர் நாகஞ்சோலை மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது.

நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தின் தயாரிப்பில் டீ.ரீ.எஸ் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்த இசைத்தட்டில் மாணிக்கப்பிள்ளையார் புகழ் பாடும் கும்மி பாடலை நிஜந்தன் மற்றும் சுலக்சனா இணைந்து சிறப்பாக எழுதியுள்ளதுடன் டினேஸ்குமார் மற்றும் லுக்க்ஷா ஆகியோர் பாடியுள்ளனர்.

இரண்டாவது பாடலான "நாகர் பூமி.." என ஆரம்பிக்கும் வரலாறு சுமந்த பாடலை காண்டீபன் அவர்களின் அழகிய வரிகளில் டினேஸ்குமார் குரல் வழங்கியுள்ளார். மூன்றாவது "மதலை மொழியேற்றி.." என ஆரம்பிக்கும் பிள்ளையார் புகழிசைக்கும் பாடலின் பாடலாசிரியராக கிலசன் வரிகளை வடித்துள்ளதுடன் ஜெயபிருந்தாவனி பாடலை பாடியுள்ளார்.

இசைத்தட்டின் நான்காவது பாடலை டினேஸ்குமார் வரிகளில் பிருந்தாபன் மற்றும் ஜெயநளினி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடல்கள் அனைத்தும் ஆலய முன்றலில் குருமார்கள், ஆலய பரிபாலன சபையினர், நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தினர், டீ.ரீ.எஸ் படைப்பகத்தினர் மற்றும் பக்தர்களின் பங்குபற்றுதலுடன் வெளியீடு செய்யப்பட்டது. 

நாகஞ்சசோலை மாணிக்க பிள்ளையாரில் புகழிசைக்கும் பாடல் தொகுப்பினை DTS Creations எனும் வலையொளி பக்கத்தினூடாக கேட்டு இறையருள் பெறலாம்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours