நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே காரணம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக குறித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால், பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர். ஆர்டிகலா, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் ராஜபக்சக்களுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன உள்ளிட்ட குழுவினால் மக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த போதே ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மை தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours