(எம்.எம்.றம்ஸீன்)
பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில், இலங்கை உயிர் காப்பு சங்கம் மற்றும் கல்குடா சுழியோடிகள் என்பன இணைந்து நடாத்தும் இலவசமான நீச்சல் பயிற்சி மற்றும் உயிர் காப்பு சான்றிதழ் பயிற்சிநெறி அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை ) நீச்சல் தடாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாலமுனை இளைஞர்கள் சபையின் தலைவர் ஏ.எல்.எம். சீத் தலைமையில் அமைப்பின் ஆலோசகரும் சட்ட வைத்தியருமான எஸ்.எம்.றிபாஸ்தீன் அவர்களின் நெறிப்படுத்தலில் சுமார் 100ற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் அதிதிகளாக அக்கரைப்பற்று மத்திய கல்லூரியின் அதிபர் ஏ.எச்.பௌஸ், மத்திய கல்லுரியின் அபிவிருத்தி குழு செயலாளர் சபூர் ஆதம், தக்வா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.எம்.றியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours