( வி.ரி.சகாதேவராஜா)
 காரைதீவைச் சேர்ந்த 50 மூத்தோர்  சமயச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை  மாவட்டத்துக்கு  விஜயம் செய்தனர்.

குழுவினர்,  வெருகல் சித்திர வேலாயுத சுவாமி  கோவில் ,கங்குவேலி அகத்தியர் தாபனம் சிவன் கோவில், கோணேசுவரர் கோவில் ,இலட்சுமி நாராயணன் கோவில்,காளிகோவில்  கன்னியா வெந்நீர்  ஊற்று முதலிய இடங்களைப் பார்வையிட்டனர் .

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கப் பணிமனைக்கும்    விஜயம் செய்தனர்.

 திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர்  சண்முகம் குகதாசன் காரைதீவு  மூத்தோரை வரவேற்று அவர்களுக்கு   மதிய உணவு வழங்கிக்  கௌரவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours