மருதமுனை செஸ்டொ ஸ்ரீலங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் 16 ஆவது வருடப் பூர்த்தியும், "விடைபெற்ற ரமழான் விடைதேடும் மேடை" மருதமுனையிலுள்ள 08 பாடசாலைகளின் சுமார் 600 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மத்தியிலே இடம்பெற்ற இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, அஷ்ரப் ஆராதனை மண்டபத்தில்  "மர்ஹூம் மயோன் முஸ்தபா மற்றும் மர்ஹூம் பிஎம்எம்ஏ. காதர் நினைவரங்கு நினைவரங்கு" ல் அமைப்பின் கௌரவ தவிசாளரும், கௌரவ கல்முனை வலயக் கல்வி பணிப்பாளருமாகிய எம்.எஸ். சஹ்துல் நஜீம்  அவர்களின் தலைமையில் அமைப்பின் தலைவர் நாபி எம் முஸ்னீ அவர்களின் நெறிப்படுத்தலில் அண்மையில் நடைபெற்றது. 

இதில் மர்ஹூம் மயோன் முஸ்தபா மற்றும்  மர்ஹூம் பிஎம்எம்ஏ. காதர் மற்றும் சுனாமி, காஸா போன்றவற்றில் உயிரிழந்தவர்களுக்காக துஆ பிராத்தனை இடம்பெற்றதோடு மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் நினைவுரையை ஜனாப் காமில் மக்பூல் மற்றும் மர்ஹூம் பிஎம்எம்ஏ. காதர் அவர்களின் நினைவுரையை செஸ்டொ ஸ்ரீலங்கா அமைப்பின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் றிலா கமால்தீன் (நளீமி) நிகழ்த்தினார்கள்.

த்தோடு இந்நிகழ்வில் செஸ்டொ சமய கலாசாரப் பேரவையால் நடாத்தப்பட்ட  இஸ்லாமிய கலை கலாசார போட்டி நிகழ்ச்சிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்ட சுமார் 91 பாடசாலை மாணவர்களுக்கான  சான்றிதழ்களும் பணப்பரிசும் வழங்கப்பட்டது, மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மற்றும் மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கிடையிலான "இஸ்லாமிய அறிவுக் களஞ்சியம்" இறுதிப் போட்டியும் இடம்பெற்றது. இதில் அல்ஹம்ரா பாடசாலை வெற்றிபெற்றது. போட்டியின் பிரதம நடுவராக மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் கௌரவ தலைவர், செஸ்டொ ஸ்ரீ லங்கா  அமைப்பின் சிரேஷ்ட ஆலோசகர் அஷ்ஷெய்க் அன்சார் பளீல் மௌலானா (நளீமி, MA) அவர்கள் கலந்துகொண்டதோடு  சிறப்புரையும் நிகழ்த்தினார்கள். அறிவுக் களஞ்சிய ஒழுங்கமைப்பு மற்றும் போட்டித் தொகுப்பு என்பவற்றை மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபையின் கௌரவ பிரதிச் செயலாளர், செஸ்டொ சிறுவர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் பிரிவு இணைப்பாளர் அஷ்ஷெய்க் ராபி எஸ் மப்ராஸ் (நளீமி) வழங்கினார்கள்.


அத்தோடு பள்ளிவாயல்களில் கடமையாற்றும் முஅத்தின்மாருக்கான அமைப்பான மருதமுனை இறைஇல்லப் பணியாளர் நலன்புரிச் சங்கத்தின் (Masjith Employees' Welfare Society - MEWS) அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டையும் வழங்கி முஅத்திமார் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக பீல்ட் லங்கா குளோபல் ரெசெர்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும், மருதமுனை ஹியூமன் லிங்க்  நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவருமாகிய ரொஸான் கமர்தீன் அவர்களும், நிகழ்வின் பிரதம பேச்சாளராக வாழைச்சேனை தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் முதல்வர் கலாநிதி. அஷ்ஷெய்க் எம்பிஎம். இஸ்மாயில் (மதனி) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். அனைத்து நிகழ்வுகளையும் மிகச்சிறப்பாக அல்-குர்ஆன்  அல் ஹதீஸ் சிந்தனைகளுடன் செஸ்டொ சமய கலாசார பேரவையின் இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எச்.எம். பர்சான் (நஹ்ஜி) தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours