ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வருடாந்த உயர்சபை பொதுக்கூட்டம் (AGM) எதிர்வரும் 2024 ஜனவரி 5ம் திகதி வெள்ளிக்கிழமை கட்சியின் கல்முனை அலுவலகத்தில் பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேர்தல் திணைக்களத்தில் கட்சி பதிவு பெற்றபின் நடைபெறும் இரண்டாவது வருடாந்த உயர் சபை கூட்டம் இதுவாகும். "கட்சியின் தேசிய தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்" என அக் கட்சியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours