சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.பிரபாகர் அவர்கள் தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து ஓய்வுபெறுவதனை முன்னிட்டுப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் ஏற்பாட்டில் பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
எதிர்வரும் 31 ஆம் திகதியில் இருந்து தனது கல்விச்சேவையில் ஓய்வுபெறவுள்ள இவரைப் பாடசாலையின் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழையமாணவர்கள் பொது அமைப்புக்கள் எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக நாவிதன்வெளிக் கோட்டக் கல்விப்பணிப்பாளரும் சம்மாந்துறை வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளருமான பி.பரமதயாளன் சம்மாந்துறை வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் பி.குணரெட்ண மல்வத்தை இலங்கை வங்கி முகாமையாளர் கு.சசிதரன் ஓய்வுநிலை அதிபர்களான சீ.பாலசிங்கன் க.பேரானந்தம் அதிபர் என்.புவீந்தரன் பாடசாலை அபிவிருத்pச்சங்கத்தின் செயலாளர் கு.மதிவண்ணன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours