மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) காலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சம் 82 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பாசிக்குடா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான
மயிலம்பாவெளியில் 81 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமத்தில் 73.4
மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரியில் 66.7 மில்லி மீற்றர் மழை
வீழ்ச்சியும், மட்டக்களப்பில் 62.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும்,
உன்னிச்சையில் 40 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
மாவட்டத்தில்
குறைந்த மழைவீழ்ச்சியாக கட்டுமுறிவு பிரதேசத்தில் 18.6 மில்லி மீற்றர்
மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய
பொறுப்பதிகாரி ரமேஸ் சுப்பிரமணியம் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல்
தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours