( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில்
பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக பணிபுரிந்த கந்தவனம்
சதிசேகரன் 01.01.2024ஆம் திகதி திங்கட்கிழமை முதல் லாகுகல பிரதேச
செயலகத்துக்கு இடமாற்றம் பெற்று செல்கிறார்.
இடமாற்றலாகும்
காரைதீவைச் சேர்ந்த கந்தவனம் சதிசேகரனுக்கான பிரியாவிடை நிகழ்வு
திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம்
பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அவரது இடத்திற்கு உதவி பிரதேச செயலாளராக பெரிய நீலாவணையைச் சேர்ந்த திருமதி சீனிவாசகம் நிருபா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரியாவிடை நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் பிரதேச செயலக ஒவ்வொரு பிரிவின் உத்தியோகத்தர்களும் அவர் ஆற்றிய சேவைகள் பற்றி வாழ்த்து உரை நிகழ்த்தினர்..
Post A Comment:
0 comments so far,add yours