( வி.ரி.சகாதேவராஜா)

கல்வி சேவையில் 30 வருடங்களாக விஞ்ஞான பாடம் போதித்த ஆசிரியர் சதாசிவம் ரவீந்திரனுக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் வித்யாலயத்தில் பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது .

இந் நிகழ்வு ஆனைப்பந்தி இந்து மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி ம. பத்மநாதன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 நிகழ்வில் ஆசிரியர் ரவீந்திரன் அவர்களின் சேவையை பாராட்டி அங்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு நிகழ்வு இடம் பெற்றது.
 அச்சமயம் ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு அவரது சேவையை வியந்து பாராட்டினார்கள் .

ஆசிரியர் ரவீந்திரன் காரைதீவு சதாசிவம் மாணிக்கவல்லி தம்பதியினரின் ஏக முதல்வரானார். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் உறவினரான இவர்
 1992ல் காரைதீவுசண்முகமகா வித்தியாலயத்திலும் பின்னர் குடியிருப்பு கலைமகள் மகாவித்தியாலயத்திலும் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் சேவையாற்றிய அவர் இறுதியாக மட்டக்களப்பு ஆனைப் பந்தி இந்து மகளிர் வித்தியாலயத்திலும் சேவையாற்றினார்.

 இவர் மட்டு. கல்வி வலயம் மற்றும் கிழக்கு மாகாண கல்வி திணைக்கள விஞ்ஞான பாட வளவாளராகவும்  தேசிய ரீதியில் தரம் எட்டு விஞ்ஞானபாட ஆசிரியர் கைநூல் வளவாளராகவும் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours