( காரைதீவு சகா).


 திருக்கோவில் விநாயகபுரம் திருநாவுக்கரசு நாயனார் 
குருகுலத்தில் வருடாந்த  திருவெம்பாவை உற்சவத்தின் திருவாதிரை தீர்த்தம் நேற்று (27) புதன்கிழமை காலை 6.15 மணியளவில் பக்திப்பரவசத்துடன் சிறப்பாக  நடைபெற்றது.

குருகுலப்பணிப்பாளர்  கண இராஜரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நள்ளிரவில் ஆருத்ரா அபிஷேகம் இடம்பெற்றது.

 அதிகாலையில் ஆருத்ரா தரிசனமும் அதனை அதனைத் தொடர்ந்து குருகுலத்தின் தீர்த்தக் கிணற்றில்  தீர்த்த உற்சவம் இனிதே நிறைவேறியது. 

கௌரி அம்மன் ஆலய பிரதம குரு. நிலோஜன் ஐயா கிரியைகளை நடத்தினார்  . 
 அதனைத் தொடர்ந்து திருவம்பாவை பூசையில் கலந்து கொண்ட மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இல்ல செயலாளர் பா.சந்திரேஸ்வரன்( அதிபர்) உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours