உலக தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்த உன்னத கலைஞன் விஜய்காந்த் ஆவார்.
இவ்வாறு
இலங்கை தமிழரசு கட்சியின் காரைதீவு தலைவரும் காரைதீவு பிரதேச சபையின்
முன்னாள் முதல்வர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் மறைந்த நடிகர் விஜய்காந்திற்கு
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அஞ்சலி அறிக்கை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
கெப்டன் விஜயகாந்த் தாயக மக்களின் விடுதலைக்காக ஈழ தேசத்தில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு பலஉதவிகள் புரிந்தவர்.
உலக
தமிழர்களின் இதயங்களில் வாழ்ந்த உன்னத கலைஞன் வாரி வழங்கும் வள்ளல் பாமர
மக்களையும் திரையுலகிற்கு கொண்டு வந்தவர் தமிழரின் வரலாறுகளையும்
வடகிழக்கு தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்தையும் திரைப்படங்கள் ஊடாக
உலகத்திற்கே ஈழத் தமிழர்களின் அபால நிலையை எடுத்துக்காட்டியவர் தேசத்தின்
மீது பற்றோடு பல தாயக மக்களினுடைய கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகின்றோம்
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய தாயக மக்கள் சார்பாக இறைவனை
பிரார்த்திக்கின்றேன் .
Post A Comment:
0 comments so far,add yours