(கனகராசா சரவணன்)



முஸ்லீம் மக்களை குறிவைப்பது உறுதி பேர் முடிந்த கையுடன் குறிவைத்த இனம் என்பதை  முஸ்லீம் மக்கள் விளங்கிகொள்ளவேண்டும். தமிழ் பேசும் மக்களுடைய வடகிழக்கு நிலப்பரப்பின் அடையாளத்தை மொழி என்ற அடிப்படையில் பாதுகாக்க தவறினால் அது முஸ்லீம் மக்களையும் சேர்த்து தான் அழிக்கும். எனவே மேச்சல்தரை மக்களுடைய போராட்டம் ஒட்டு மொத்தமாக தமிழர்களுடைய போராட்டமாகவும் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக மிக்கியமான புள்ளிஎன்பதை விளங்கி அவர்களது பங்களிப்பும் எதிர்காலத்தில் அமைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

மட்டு மயிலத்தை மடு மாதவனை மேச்சல்தரை பகுதியில் இருந்து சிங்கள குNயேற்றத்தை வெளியேற்று கோரி பண்ணையாளர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தி 100 வது நாள் போரட்டதினமான இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட அவர்  ஊடகங்க ளுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 

மட்டு மேச்சல் தரையான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை ஒட்டு மொத்தமாக சிங்கள மயப்படுத்தலின் கடைசி கட்ட நடவடிக்கையாக பார்க்கின்றோம் ஏற்கனவே திருகோணமலை அம்பாறை தமிழர்களின் கைகளில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர் அதில் மிஞ்சி இருந்தது மட்டக்களப்பு மாவட்டம் மட்டும்தான்.

ஆனால் அந்த மாவட்டத்தை இன்று மிக தீவிரமாக வந்து சிங்கள மயப்படுத்துவதற்குரிய வேலை திட்டத்தை முன்னெடுப்பதற்குரிய வேலைத் திட்டத்தின் முக்கியமான அங்கமாக இந்த மயிலத்தமுடு மாதவனை மேச்சல் தரையில் பண்ணையாளர்களை அப்புறப்படு;த்தி  அந்த நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்றி சிங்கள குடியேற்றத்தை குடியேற்ற செயற்படுத்துக்கின்ற செயற்திட்டம்

பெர்ருளாராத ரீதியாக அங்கு குடியேற்றப்படுகின்ற சிங்கள மக்களுக்குரிய அடிப்படை வசதிகளும் பொருளாராத ரீதியாக அவர்களை வளர்த்தெடுப்பதற்கான  திட்டங்களும் வகுக்கப்பட்டு இன்று நடைமுறையில் வந்து ஒரு முக்கியமான கட்டத்தை வந்தடைந்துள்ளது.

சர்வதேச நிறுவனங்களின் நிதி பங்களிப்போடு மாதுறு ஓயா வலதுகரைவாய்க்கால் அபிவிருத்தி திட்டம் கனிசமான அளவிற்கு முன்னேறி அந்த திட்டத்தின் கீழ் ஆயிரக்கனக்காக சிங்கள குடும்பங்களை குடியேற்றங்களை கொண்டுவந்து அந்த அபிவிருத்தி திட்டம் ஊடாக அனைத்து நிலங்களையும் சிங்கள மயமாக்கும் திட்டம்தான் இன்று மேச்சல் தரையில் இருந்து பண்ணையாளர்களை துரத்துகின்ற அவர்களது பொருளாதாரத்தை அழிக்கின்ற ஆரம்பட்டமாக இருக்கின்றது

ஆகவே இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் என்று நிரூபிக்க கூடிய மட்டக்களப்பு மாவட்டத்தை எக் காரணம் கொண்டும் இழக்க விடக்கூடாது அந்தவகையில் சகோதர முஸ்லீம் மக்களிடம் கேட்டுக் கொள்வது இன்று மட்டக்களப்பை நாங்கள் கைவிட்டால் இதனை சிங்கள தேசம் ஆக்கிரமிப்பதற்கு அனுமதிக்ககூடாது

மேச்சல் தரையில் கால்வைத்து அதை சிங்கள பிரதேச செயலகம் உருவாக்கி திருகோணமலையில் சேருநுவரவில் நடைபெற்றவாறு குறியேற்றி எண்ணிக்கை வந்ததின் பிற்பாடு ஏனைய இடங்களில் நுழைவதற்கான அத்திவாரத்தை பொறுகின்ற வேலைத்திட்டமாகும்.

பேர்காலத்தில் சிறிலங்கா அரசுடன் நின்ற போதும் கூட  பேர் முடிந்த கையுடன் குறிவைத்த இனம் முஸ்லீம் மக்கள் ஆகவே முஸ்லீம் மக்களும் விளங்கி கொள்ளவேண்டும் தமிழ் பேசும் மக்களுடைய வடகிழக்கு நிலப்பரப்பின் அடையாளத்தையும் மொழி என்ற அடிப்படையில் பாதுகாக்க தவறினால் அது முஸ்லீம் மக்களையும் சோத்து தான் அழிக்கும.

எப்படி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரைக்கும் முஸ்லீம் மக்களுடைய செயற்பாடுகளும் சேர்த்து  உலகத்திற்கு வெளிக் கொண்டு வந்தோமே அதேபோன்று இந்த மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை மக்களுடைய இந்த போராட்டம் ஒட்டுமொத்தமாக இந்த தமிழர்களுடைய போராட்டமாகவும் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுடைய தாயகமாக பாதுகாப்பதற்கு மிக மிக்கியமான புள்ளி என்பதை விளங்கி கொண்டு எதிர்காலத்தில் முஸ்லீம் மக்கள் இந்த போராட்டத்தில்  பங்களிப்பு அவசியம் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours