கல்முனை நெனசல பயிற்சி நிலையத்தின் பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் கொழும்பு பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை(23) இடம்பெற்றது
கல்முனை நெனசல பயிற்சி நிலையப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.ஹாஜா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்தியத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான நிந்தவூரைச் சேர்ந்த எம்.சஹாப்தீன் மற்றும் கல்மூனையைச் சேர்ந்த அஸ்ஹர் ஆதம் ஆகியோர் மிக நீண்ட காலமாக இவர்கள் ஆற்றிவரும் ஊடகப் பணிக்காக பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது இவர்கள் இருவரும் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நகழ்வில் சார்க் கலாசார நிலையத்தின் பணிப்பாளர் (ஆராய்ச்சிகள்) பேராசிரியர் பினா காந்தி டிஓரி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். டேட்மார் டொயிரிங் கெளரவ அதிதியாகவும் கல்முனை நெனசல பயிற்சி நிலையத்தின் சிரேஷ்ட ஆலோசகரும் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவ சபையின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி யூ.எம்.நிஸார்.மற்றும் சமாதான கற்கைகள் நிலையத்தின் தலைவரும் பேராசிரியருமான எஸ்.எல்.றியாஸ் ஆகியோர்
விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர் .
Post A Comment:
0 comments so far,add yours