மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் வருடாந்தம்
ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா நிகழ்வானது இவ்வருடமும் பிரதேச
செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் 21.12.2023 திகதி
பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அதிதிகளினால்
மங்கல விளக்கேற்றப்பட்டதனை தொடர்ந்து குருக்கள்மடம் புனித பிரான்சிஸ்
அசிசீயார் தேவாலயத்தின் அருட்தந்தை ஜீ. அம்றோஸ், ஒளியேற்றும் உலக பணிச்சபை
அருட்திரு அ.நிரஞ்சன் ஆகியோரின் ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து
வைக்கப்பட்டன.
பெரியகல்லாறு தூய அருளானந்தர் தேவாலய மாணவர்கள்
மற்றும் தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலய மாணவர்களினால் கரோல் கீதம்,
நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன், பிரதேச
செயலக உத்தியோகத்தர்களினால் பாடல்களும் இசைக்கப்பட்டது.
இதன் போது
நத்தார் தாத்தா வருகையுடன், நிகழ்வுகளை ஆற்றுகை செய்த மாணவர்கள் மற்றும்
அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும்
வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி
சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர் வே.தவேந்திரன், அலுவலக பதவிநிலை
உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours