(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு
ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் இரத்தினபுரிக்கு
நேற்று முன்தினம் விஜயம் செய்து 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்று
இந்து தர்மத்தின் வழிபாட்டு முறைகளை விரிவாக எடுத்துரைத்து
சொற்பொழிவாற்றினார்.
இரத்தினபுரி
மாவட்டத்திலுள்ள கரபிஞ்ச கிராமத்தில் அபிராமி அறநெறி பாடசாலையை திரை
நீக்கம் செய்து தொடங்கி வைத்ததோடு அங்குள்ள கிராம மக்களுக்கு தர்மத்தின்
வழியில் வாழ்தல் என்னும் தொனி பொருளில் உரையாற்றினார்.
இரத்தினபுரி
மாவட்டம் அருள்மிகு ஸ்ரீ ரத்தினபுரீஸ்வரர் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற
இந்து ஸ்வயம் சேவக குழுவினரின் பெண்களுக்கான முகாமில் கலந்து கொண்டு,
யுவதிகளை சமுதாயத்தின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது என்ற பொருளில்
உரையாற்றினார்.
.
Post A Comment:
0 comments so far,add yours