பாறுக் ஷிஹான்
மருதமுனை House of English இன் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த கலைநிகழ்வும் கௌரவிப்பும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் பாடசாலையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம் மூஸா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை(22) இடம்பெற்றது
பின்னர் பாடசாலை மாணவர்களினால் தேசிய கீதம் பாடப்பட்டது.தொடர்ந்து வரவேற்புரை வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன.பிரதம அதிதிகளின் உரை பரிசளிப்பு வைபவம் என தொடர்ச்சியாக இடம்பெற்றன.
அல்-மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் அம்பாறை மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளருமான வீ.ஜெகதீசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். அவரின் சேவையினை கௌரவிக்கும் முகமாக அவர் கல்வி கற்ற பாடசாலையில் இக் கௌரவம் இடம்பெற்றமை முக்கிய தடயமாகும்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை இளமாணி வைத்தியர் .டீ.எம்.இம்ஜாட், இலங்கை தேசிய வைத்தியசாலையின் கதிரியக்க இளமாணி ஏ.எம்.முகம்மட் றிஸ்வி ஆகியோர் நிகழ்வின் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டனர்.
அல்-மனார் மத்திய கல்லூரியின் அதிபர் ஐ.உபைத்துல்லா, வியூகம் முகநூல் தொலைக்காட்சியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஜனூஸ், மருதமுனை அமேசிங் மோள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெஸ்மீர் ஆகியோர் விஷேட அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
விஷேட அழைப்பாளர்களாகவும் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் கௌரவிக்கப்பட்டார்.
அறிவிப்பாளர்,ஆசிரியர் ஏ.எல்.நயீம் நிகழ்வினை நெறிப்படுத்தினார்.
அத்துடன் பாடலுக்கான நடனம் விநோத உடை போட்டி என்பன இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் திறமை காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இறுதியாக ஆங்கிலப் பாடசாலையின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களுக்கு விண்ணப்பங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours