(சுமன்)
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் வெள்ள அனர்த்தத்திற்குள்ளான வவுனியா கனகராயன் குளம், விஞ்ஞான குளம் மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசாவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியின் மூலம் மேற்படி நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா விஞ்ஞானபுரம் பாலர்பாடசாலையில் இடம்பெற்ற இச்செயற்திட்டத்தின் போது கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours