கமல்

களுவாஞ்சிகுடி ஹிமாலயா கல்லூரியின் தமிழமிர்தம் விருது வழங்கும் விழாவும் விடைகொடு விழாவும் தமிழ் பாட ஆசிரியர் சாமித்தம்பி பத்மகுமார் தலைமையில் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் 25.12.2013 அன்று நடை பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்


2021, 2022 ஆண்டுகளில் தமிழ் பாடம் கற்றுக் பல்கலைக் கழகம் தெரிவுசெய்யப்பட்ட 44 மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2023 இம் முறை பரீட்சை எழுதவிருக்கும் 80 மேற்பட்ட மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தி விடை கொடுக்கும் முகமாக அவர்களுக்கும் நினைவு பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மாணவர்களின் பலதரப்பட்ட கலை நிகழ்வுகள் நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours