எதிர்வரும் 30.12.2023, 31.12.2023 திகதிகளில் மருதமுனை சைக்கிளிங்க கிறீன் கழகத்தினால் பசுமையாக்கம், விதைப்பந்தாக்கம், மிதிவண்டிப் பாவனையை அதிகரித்தல், நஞ்சற்ற உணவை, காலநிலை மாற்றம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை மையமாகக் கொண்டு பிரமாண்டமானமளவில் நடைபெற ஏற்பாடாகியிருக்கும் ”பொலநறுவை சைக்கிளோட்டம்” சம்பந்தமான ஊடக மாநாடும், புதிய மேலங்கி அறிமுகமும் திங்கட் கிழமை இரவு மருதமுனை அல்-ஹிக்மா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக மாநாட்டில் ”பொலநறுவை சைக்கிளோட்டம்” சம்பந்தமாக எம்.எப். ஹிபத்துல் கரீம் (பதிவாளர் ஊவா- வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்), கலாநிதி சத்தார் பிர்தௌஸ் (ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர்), எம்.எஸ்.எம். பசீல் (பொறியியலாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), ஏ.எம். றியாஸ் அகமட் (தலைவர், உயிரியல் பிரிவு, தென்கிழக்குப் பல்கலைக்கழம்), நைறுஸ்கான் ஹிதாயத்துல்லாஹ் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), அஷ்ஷெய்க் யு.எல்.எம். சாஜித் (கலாசார உத்தியோகத்தர்) ஆகியோர் விளக்கவுரைகளை வழங்கினர்.
மருதமுனையில் இருந்து எதிர்வரும் 30.12.2023ம் திகதி ஆரம்பித்து புதுக்குடியிருப்பு – ஏறாவூர் – ஓட்டமாவடி – நாவலடி – புணானை – ரிதிதென்ன – வெலிகந்த – மன்னம்பிட்டி – கல்லெல்ல – கதுறுவல -பொலநறுவ – தம்பாளை – சுங்காவில் போன்ற பிரதேசங்களுக்கு சென்று எதிவரும் 31.12.2023 அன்று மீண்டும் சைக்கிளோட்டிகள் மருதமுனையை வந்தடைய உள்ளனர். இந்த பயணத்தின் போது 20 சைக்கிளோட்டிகள் கலந்து கொண்டு பாடசாலை சுற்றாடல் கழகங்களை சந்திக்க உள்ளதுடன் இவர்கள் விதைப்பந்துகளையும் வீச உள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours