(எம்.ஏ.றமீஸ்)
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கிறிக்கற் சுற்றுப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(29) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பகல் இரவு போட்டிகளாக இடம்பெறும் இச்சுற்றுப் போட்டி எதிர் வரும் 29,30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெறும். பழைய மாணவர்களின் 21 அணிகள் இச்சுற்றுப் போடியில் கலந்து கொள்ள உள்ளன. இச்சுற்றுப்போட்டியில் வெற்றிப்பெறும் அணிக்கு ரூபா 75,000 ஆயிரம் பணப் பரிசும், சம்பியன் கேடயமும் வழங்கப்படும். இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூபா 50,000 ஆயிரம் பணப் பரிசும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படும்.
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் கடந்த காலங்களில் கல்வி பயின்ற பழைய மாணவர்களை ஒன்று சேர்த்து பாடசாலையின் அபிவிருத்தியில் அவர்களை ஒன்று சேர்க்கும் இவ்வுன்னத வேலைத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கிறிக்கற் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வின்போது இப்பாடசாலையில் கல்வி பயின்று உயர் நிலை பதவிகளில் கடமையாற்றி வருபவர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு கிறிக்கற் வீரர்கள் சகிதம் அவர்கள் பாடசாலை வளாகத்தில் இருந்து அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் வரை நடை பவனியாக முஸ்லிம் சமய பண்பாட்டு விடயங்களுடன் அழைத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்விற்கு அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தின் அனைத்து பழைய மாணவர்களையும் சமூகமளிக்குமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours