(அஸ்ஹர் இப்றாஹிம்)

2024 ம் ஆண்டுக்கான கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் (EFO) முதலாவது  நிர்வாகப் பொதுக் கூட்டம்  கடந்த  ஞாயிற்றுக் கிழமை  ஒன்றியத்தின்  தவிசாளர்  பொறியியலாளர் எம்.எம் நஸீர் தலைமையில் சாய்ந்தமருதில் இடம்பெற்றது.

இந்த வருடத்தின் பாரிய திட்டமான  EFO தலைமைக் காரியாலயத்தை சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில்  அமைத்தல் , 
க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த புலமை பரிசில் வழங்கல், EFO அமைப்பின் வளர்ச்சிக்காக புதிய  உறுப்பினர்களை  இணைத்துக் கொள்ளல் போன்ற  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours