பதுளை
செங்கலடி மீள்நிர்மான மற்றும் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் 25km
நீளமான அம்பாறை உகன மகாஓய வீதியானது காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள்
சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் சுமார் 3000 மில்லியன் செலவில்
நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன
அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி திட்டமானது கிராமிய
வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட
அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை
மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான டபிள்யூ.டீ.வீரசிங்க, முன்னால் மாகாண
சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க
அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன், மாவட்ட
அமைப்பாளர் என்.திருநாவுக்கரசு உட்பட துறைசார் அதிகாரிகள்,
முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours