எஸ்.சபேசன்


சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தின் அதிபர் நா.பிரபாகர் அவர்கள் தனது 36 வருட கல்விச்சேவையில் இருந்து இன்று ஓய்வு பெறுகின்றார்

இவர் துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும் நாவிதன்வெளியை வசிப்பிடமாகவும் கொண்டவர் 

இவர் நாவிதன்வெளி தபாலகத்தின் உபதபால் அதிபர் நாகலிங்கம் மற்றும் வைரமணி ஆசிரியை அவர்களது புதல்வர் என்பதுடன் தனது ஆரம்பக்கல்வியினை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியினை கல்முனை பற்றிமா தேசியபாடசாலையிலும் கற்று 1988 ஆம் ஆண்டு ஆசிரியராக நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்று  அதிபர் சேவைப்போட்டிப்பரீட்சையில் 2009.11.13 திகதி அதிபராக சவளக்கடை விநாயகர் வித்தியாலயத்திலும் பின்னர் 2010.06.02 தொடக்கம் 2020.1.05 வரை நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்திலும் 2020.01.06 தொடக்கம் கலைமகள் மகாவித்தியாலயத்திலும் கடமையாற்றியநிலையில்  இவர் ஓய்வுபெற்றுள்ளார் .


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours