கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவினுள் அடங்குவதும், நாற்புறமும் நீராற் சூழப் பட்டதுமான துரவந்தியமேடு கிராமம் அண்மையில் பெய்த கடும் மழையினாலும், சேனநாயக்க சமுத்திர நீர் திறந்து விடப்பட்டமையினாலும் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து வசதிகள் அனைத்தும் தடைப்பட்ட நிலையில் ஏனைய பகுதிகளினின்றும் தனிமைப் பட்டிருந்து.

கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் விடுத்த வினயமான வேண்டுகோளுக்கு அமைய  இக்கிராமத்தில் வாழும் 72 குடும்பங்களுக்கு அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO UK) பூரண நிதியிலிருந்து  தலா ரூபா ஆறாயிரம் ( Rs.6000/-) பெறுமதியான பொருட்கள் அடங்கிய 72 பொதிகள் வழங்கப் பட்டுள்ளன. 

ADVRO-SL தலைவர் திரு.எஸ். சந்திரலிங்கம் அவர்களது தலைமையில் இன்று (14.01.2024)  இடம்பெற்ற இந்நிகழ்வில் ADVRO-SL அமைப்பின் செயலாளர் திரு. கண.வரதராஜன், உபதலைவர் திரு. தே. சர்வானந்தன் ஆகியோருடன் கல்முனை வடக்கு  பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ  உத்தியோகத்தர்களும்  நிர்வாக உத்தியோகத்தரும் இக்கிராமத்தின் கிராம சேவை உத்தியோகத்தரும் கலந்து கொண்டனர். 






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours