(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வொலிவேரியன் கிராம மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு Rizley Musthaffa Education Aid Social Service Organization இன் பூரண அனுசரணையில் (14) இடம்பெற்றது.

சாய்ந்தமருது பைன் ஸ்டார் (FINE STAR) விளையாட்டுக் கழக, சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எம். றியாஸின் வேண்டுகோளுக்கிணங்க,  மாயோன் குரூப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா, கள விஜயம் மேற்கொண்டு, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, கலந்துரையாடி அவர்களுக்கான உணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தினர், 
மயோன் குரூப் அமைப்பினர் உட்பட பைன் ஸ்டார் சமூக சேவை அமைப்பின் தலைவர் எம்.எம்.றியாஸ்,  செயலாளர் ஏ.எல்.எம். ஹாசிப், முகாமையாளர் எம்.எச்.எம் நௌபல், அமைப்பின் தவிசாளரும் 
சமூகசேவைப்பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.எம்.முஹம்மட் றிப்னாஸ், அமைப்பின் இணைப்பாளர் எம்.எப்.எம்.பஸ்லுல் ஹக் (BA), எம்.எச்.எம்.முஸ்பீக் ஆசிரியர் மற்றும் நிருவாக உறுப்பினர்களான, எம்.பி.எம்.பௌசி, எம்.ஜெ.எம்.ஆசிக், முஹம்மட் சிஹாப், ஏ.எம்.ஏ அஜ்ர், எம்.எச்.எம்.அஜாஸ், எம்.எம்.யாசிர், ஏ.எம்.இர்ஷாத், ஏ.ம். நிஜாத், எம்.சலீம், எம். இன்ஸாத், எம்.ஸப்ராஸ் மற்றும் கழக வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours