(அஸ்ஹர் இப்றாஹிம்   )


மகாவலி கங்கையின் நீர் மட்டம் திடீரென அதிகரித்தூள்ளதால் மட்டக்களப்பு - பொலநறுவ நெடுஞ்சாலையின் கல்லெல்ல பகுதியால் பயணிப்பது மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருப்பதால் வீதியால் பரவும் வெள்ள நீரின் அளவும் நிமிடத்திற்கு நிமிடம்  அதிகரிப்பதால் ஆபத்தான நிலமை ஏற்படலாம் என்ற அச்சத்தில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இவ் வீதியை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுள்ளதுடன், அவசரமாக பயணிப்போர் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours