(எம்.எம்.றம்ஸீன்)

பொலன்நறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள  பராக்கிரம சமுத்திரம், மன்னம்பிட்டி குளம் முதலியனவற்றின் வான்கதவுகள் திறக்கபட்டதன் விளைவாக மகாவலி கங்கையின் கிளை ஆறான வெருகல் ஆற்றில் நீர்மட்டம் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்துள்ளது.

 

இதன் விளைவாக  வட்டவன், மாவடிச்சேனை, சேனையூர், ஆணைத்தீவு முதலிய ஊர்கள் வெள்ளத்தில்  மூழ்கியுள்ளன. 

இவ்வூர்களில் வாழ்ந்த மக்கள் வட்டவன் ஶ்ரீ தான்தோன்ரீஸ்வரர் வித்தியாலயத்தில் 106 குடும்பத்தைச் சேர்ந்த 295 பேரும், மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் 140 குடும்பத்தைச் சேர்ந்த 429 பேரும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

 
இவர்களைத் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் மற்றும் செயலாளர் திரு.கணபதிப் பிள்ளை சிவானந்தன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

 
இப்பொழுது இந்த மக்களுக்கு அரசாங்கத்தின் பேரிடர் முகாமைத்துவத் துறையினரால் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இம்மக்கள் வீடுகளுக்குச் செல்லும் பொழுது இடருதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கம் மேற்கொண்டு வருகிறது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours