( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிலுள்ள திராய்க்கேணி  தமிழ் கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

 அங்குள்ள பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. வீதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
 நேற்று இரவு அங்கு சென்ற காரைதீவு முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக சேவையாளருமான கி.ஜெயசிறில் அங்கிருந்த மக்களுக்கு சமைத்த உணவை வழங்கினார்.

 மக்கள் வீதிகளில் நின்று அந்த உணவை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 அங்கு கிராம சேவையாளர் வரவில்லையா என்று ஜெயசிறில்  கேட்டதற்கு நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் வந்து பார்க்கவில்லை என்று மக்கள் வேதனையோடு கூறினார்கள் .

அங்கு ஜெயசிறில்  கூறுகையில்.

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுடைய அவல நிலையில் பங்கு கொள்வதற்கு முன் வாருங்கள். நான் தயார். நீங்களும் தயாராகுங்கள் எந்தப் பிரதேசத்தில் சமைத்த உணவு வேண்டுமோ தொடர்பு கொள்ளுங்கள் உதவி செய்பவர்கள். சரீர உதவியாக இருந்தால் நேரடியாக பங்கு கொள்ளுங்கள். இடர் உதவி வழங்குகின்ற சமூக சேவையாளர்கள் நலம்பிரும்பிகள் நேரடியாக உங்களுடைய உதவிகளை வழங்குவதற்கு எங்களுடன் கை கோருங்கள் என்றும் எமது மக்களுக்காக ஆலயங்களில் அன்னதானம் செய்வதை விட அமுதுகள் செய்வதை விட பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு உங்களால் முடிந்த உதவியை நேரடியாக அல்லது எங்களோடு இணைந்து பணி செய்ய முன் வாருங்கள் என்றும் உங்களுடன் இந்த தொலைபேசி 0753100862இலக்கத்தோடு தொடர்பு கொண்டு உங்களது தேவைகளையும் சேவைகளையும் பூர்த்தி செய்யுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours