நூருல் ஹுதா உமர்
தொடர்ச்சியாக பெய்த மழை வீழ்ச்சி காரணமாகவும் வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை திறந்து விட்டமையாலும் கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் வெள்ளப்பெருக்கால் நிலைகுலைய செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட காரைதீவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவடிப்பள்ளி மக்களை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து பேசி அந்த மக்களின் குறை, நிறைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று அந்த மக்களுக்கு தேவையான உலருணவுப் பொதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு ஊடாக மாவடிப்பள்ளி மக்களுக்கு கையளித்தார்.
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் வெள்ள அனர்த்த நிலைகளை பார்வையிட்ட பின்னர் அந்த மக்களுக்கான நிவாரண பொதிகளை வழங்க தீர்மானித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை காரைதீவு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி அமைப்பாளர் மௌலவி எம்.ஐ.எம். றியால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி மத்திய குழு நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் சட்டத்தரணி சப்ராஸ் நிலாம், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கி வைத்தார்.
வெள்ள அனர்த்தத்தில் முழுமையாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலக பிரதேசங்களுக்கும் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் அந்தந்த பிரதேசங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை அரச உயர்மட்டங்கள், அரச அதிகாரிகளை அணுகி முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours