எஸ்.சபேசன்
மட்டக்களப்பு துறைநீலாவணையினைச் சேர்ந்த வயிரமுத்து பேரின்பநாயகம் அதிபர் அவர்கள் அகில இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் முன்ணிலையில் 2024.01.19 ம் திகதியன்று சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
துறைநீலாவணையினை வசிப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது மட்/ பட்/ மகிழுர்முனை சக்தி வித்தியாலயத்தில் தரம் 1 அதிபராக கடமையாற்றி வருகின்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதப் பட்டதாரியான இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானி பட்டத்தையும் பெற்றுள்ளதுடன் பாடசாலை முகாமைத்துவ டிப்ளோமா மற்றும் பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறிகளை தேசிய கல்வி நிறுவகத்தில் பூர்த்தி செய்துள்ளார்.
இவர் நீண்ட காலமாக மாணவர்களுக்கான கணித பாட கற்பித்தல் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவராகவும் காணப்படுகிறார். இவர் மாணவர்களின் கல்வித்துறைக்காக 30 வருடத்திற்கும் மேற்பட்ட சிறந்த அர்ப்பணிப்பான சேவையை ஆற்றிவருவதுடன் துறைநீலாவணை தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் பதவி வகித்து உயர்ந்த கல்வி சேவையினை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours