உலக தமிழ்ச் சங்க இலக்கிய விருதைப் பெற்ற காரைதீவு கனடா பேராசிரியர் பாலசுந்தரத்திற்கு கனடாவில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்தியா
தமிழகத்தில் இடம் பெற்ற அயலகத் திருவிழாவில் பேராசிரியர் இளையதம்பி
பாலசுந்தரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் எழுத்துலகில்
ஆற்றிய தமிழியலுக்கான விருதினையும் பாராட்டினையும் வழங்கி மதிப்பளித்ததனை
வரவேற்கும் நோக்குடன்
கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெரும் பாராட்டு விழா நடைபெற்றது.
பல்கலைக்கழக
மாணவர்கள்,
விரிவுரையாளர்கள் ,ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து
நேற்றுமுன்தினம் கனடா அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்டபத்தில் பேராசிரியர்
இ.பாலசுந்தரத்திற்கான வரவேற்பும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டன.
அதேவேளை,உலகத்
தமிழ்ச் சங்க இலக்கிய விருது இம்முறை கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த
பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரத்திற்கு கிடைத்திருக்கின்றது.
இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இடம் பெற்ற நிகழ்வில் வழங்கி வைத்தார்.
பேராசிரியர் பாலசுந்தரத்துக்கு இந்த விருதோடு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் பணமும் பொன்னாடையும் வழங்கப்பட்டது.
17
தகுதியான நூல்களையும் 64 ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டு இருந்தார்
காரைதீவைச் சேர்ந்த இளையதம்பி செல்லம்மா தம்பதியினரின் புதல்வரான இவர்
தமிழ்
இலக்கியத்தில் முதுதத்துவமானி பட்டம் பெற்று யாழ்ப்பாணம் கொழும்பு லண்டன்
பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக இருந்து பேராசிரியர் ஆனார்.
சாஹித்திய மண்டல விருது இலக்கிய விருது வாழ்நாள் சாதனையாளர் விருது என்று பல விருதுகளை பெற்றவர்.
இவரது இலக்கியப் பணியை சிறப்பித்து மதுரை உலக தமிழ்ச் சங்கத்தினர் இந்த விருதை வழங்கி வைத்தனர்
பேராசிய பாலசுந்தரம் தமிழ் துறையில் பேராசிரியராக கனடா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தற்சமயம் இணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Post A Comment:
0 comments so far,add yours