எஸ்.சபேசன்
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது கலை கலாசாரம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான விழாக்களை நடாத்துகின்றோம்

சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக நடாத்தப்பட்டுவருவதுடன் எமது அமைப்பானது பலவருடகாலமாக இவ்விழாவினை சிறப்பாக நடாத்திவருகின்றோம் என சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்ககத்தின் பொருளாளரும் சமூகசேவகருமான க.துரைநாயகம் தெரிவித்தார்

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது.


சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்  பத்தாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல்    விழா- 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல் .சுதர்சன் தலைமையில் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ்  நாட்டின்Treffpunkt wittig  kofen jupiters trasse 15 ,3015 B    இல் நடைபெற்றது

இஇந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன் கிழக்குமாகாண மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ச.தங்கராசா உட்பட சுவிஸ் உதயத்தின் நிருவாகத்தினர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் நாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது கலை கலாசாரம் பண்பாடுகள் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக புலம்பெயர்ந்து வாழும் இடத்திலே இவ்வாறான விழாக்களை எமது பண்பாட்டுடன் சேர்ந்ததாகக் கொண்டாடி வருகின்றோம்.

இலங்கையில் வாழும் எமது மக்களுக்கு உதவிசெய்யும் நோக்குடன் சுவிஸ் உதயம் அமைக்கப்பட்டு உதவிகளைச் செய்து வருவதுடன் இவ்வாறான எமது பண்பாடுகளையும் கலை அம்சங்களையும் பாதுகாப்பதற்கான வேலையாகவே இவ்விழக்கள் இடம்பெற்றுவருகின்றது என்றார்

.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours