நூருல் ஹுதா உமர்
காரைதீவு மாவடிப்பள்ளி வழியாக அம்பாறை செல்லும் பாதை வெள்ளத்தினால் மூழ்கி போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பெரிய பாலத்திற்கும் சின்ன பாலத்திற்கும் இடையில் வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இன்னும் மழை பெய்தால் முற்றாக போக்குவரத்து தடைபடும் அபாயம் உள்ளது.
மட்டுமின்றி தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக வயல்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நீர் நிலை போன்ற காட்சியளிப்பதுடன் வீதி ஓரங்களில் மீன்பிடி நடவடிக்கையில் பொதுமக்கள் ஈடுபட்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளதுடன் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் வீடுகள் பலதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் கிராம மக்களில் சிலரும் தமது வீடுகளில் இருந்து வெளியாகி பாதுகாப்பான இடங்களை நோக்கியும், உறவினர்களின் வீடுகளுக்கும் சென்றுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours