( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
நகர லயன்ஸ் கழகத்தால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
கலாநிதி மூ. கோபாலரெத்தினம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இந்
நிகழ்வு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் பொறியியலாளர் லயன் எம்.
சுதர்சன் தலைமையில் அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்கள சுற்றுலா
விடுதியில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீதி
அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன்
பரமலிங்கம் இராசமோகன் ஏற்பாட்டில் இப்பாராட்டு விழா இடம் பெற்றது.
கிழக்கு
மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி திறன் விருத்தி மகளிர்
அபிவிருத்தி நீர் விநியோக துறை அமைச்சின் செயலாளராக லயன் கலாநிதி
மூ.கோபாலரத்தினம்(மூகோ) இதன் போது பொன்னாடை போர்க்கப்பட்டு பாராட்டு விருது
வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours